Flash News : செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 8, 2020

Flash News : செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு.






செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அன்லாக் 4.0 அறிவித்தபடி,  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.





கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் ஆன்-லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. என்றாலும், மாணவர்கள் நேரடியாக வகுப்பறை சென்று படித்ததுபோன்று இல்லை. ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க முடியாத நிலை உள்ளது.


இந்தநிலையில் அன்லாக் 4-வது கட்டத்தின்போது இதற்கான தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 21-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ - மாணவிகள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது 6 அடி தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சுததப்படுத்துதல், முக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Post Top Ad