Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, September 28, 2020

செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' - மதிப்பீட்டை நிறுத்தி வைக்க முடிவு?

 


கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில், 'மாஸ் காப்பி' அடித்ததாக புகார் எழுந்துள்ளது.



எனவே, அதுபோன்ற விடைத்தாள்களை பிரித்தெடுத்து, மதிப்பெண் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.'ஆன்லைன்'தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கொரோனா பரவலால், செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 


தேர்வே நடத்தாமல், அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கும், கடைசி செமஸ்டரில், 'அரியர்' வைத்தவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை சார்பில், 'ஆன்லைனில்' மாணவர்கள் தனித்தனியாக தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.



ஆனால், மற்ற பல்கலைகள் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில், மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதி, விடைத்தாள்களை அனுப்ப உத்தரவிடப்பட்டது. நண்பர்களின் வீடுஇந்த தேர்வுக்கான விடைத்தாள்களை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில், பல மாணவர்களின் விடைகள், ஒரே மாதிரியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


இதுகுறித்து நடந்த முதல் கட்ட விசாரணையில், மாணவர்கள், தங்கள் நண்பர்களின் வீடுகள் அல்லது வேறு பொதுவான இடங்களில் குழுவாக சேர்ந்து, 'காப்பி' அடித்தது தெரிய வந்துள்ளது. இதில், நடந்தது என்ன என்பது குறித்து, ஒவ்வொரு கல்லுாரியும் விசாரணையை துவங்கியுள்ளது. மேலும், ஒரே மாதிரியாக உள்ள, விடைத்தாள்களை சேகரித்து, அவற்றின் மதிப்பீட்டை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LightBlog