தமிழக அரசு ஊழியர்களுக்கு ' கியூ.ஆர் . ' குறியீடுடன் புதிய அடையாள அட்டை. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 22, 2020

தமிழக அரசு ஊழியர்களுக்கு ' கியூ.ஆர் . ' குறியீடுடன் புதிய அடையாள அட்டை.

 






தமிழக அரசின் அனைத்து துறைகளின் தலைமை அலுவல கங்களும் சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயல கத்தில் தான் இயங்கி வருகின்றன . 

முதல் - அமைச்சர் , துணை முதல் - அமைச்சர் , அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை களின் உயர் அதிகாரிகளின் அலுவலகங்களும் இங்கு தான் உள்ளன . தலைமைச் செயலகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் . இவர்களுக்கு ஏற்கனவே அரசால் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள் ளது . அதில் ஊழியர்களின் புகைப்படத்துடன் விவரங்கள் இடம்பெற்றுள்ளன . 



இந்த நிலையில் ' கியூ.ஆர் . ' குறியீடு கொண்ட பிரத்தியேக அடையாள அட்டை புதிதாக கொடுக்கப்பட உள்ளது . இந்த ' கியூ.ஆர் . ' கோர்டில் ஸ்கேன் செய்தால் அந்த ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் தெரிந்துவிடும் . இதற்காக ஊழி யர்களை புகைப்படம் எடுக்கும் பணி நேற்று முதல் தொடங் கியுள்ளது . 


ஏற்கனவே தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்த ஊழி யர்கள் அழைக்கப்பட்டு தலைமைச்செயலகத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டது . முதல் நாளான நேற்று 745 பேருக்கு புகைப்படம் எடுக்கப் பட்டது . இன்று ( செவ்வாய்க்கிழமை ) 775 பேருக்கும் , நாளை 730 பேருக்கும் , நாளை மறுதினம் 586 பேருக்கும் , வெள்ளிக்கி ழமை 736 பேருக்கும் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது . * இதற்கான பணிகள் அனைத்தும் 25 - ந் தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது . அதன் பின்னர் , அடையாள அட்டை தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது . 


இதற்கான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அதி காரிகள் தெரிவித்தனர் .

Post Top Ad