ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு 17 (B) அளித்தது தமிழக அரசு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, July 5, 2020

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு 17 (B) அளித்தது தமிழக அரசு


அரசாணையை விமர்சித்ததாக , ஆசிரியர்கள் சங்கத்தினர் இருவருக்கு , ' மெமோ ' கொடுக்கப்பட்டு உள்ளது .


' பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகளை விமர்சித்து , பேட்டி அளிக்கக்கூடாது ' என , இரண்டு வாரங்களுக்கு முன் , ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருந்தார் .

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் , ஈரோடு என்பதால் , இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து , தமிழகம் முழுதும் ஆசிரியர்களும் , சங்க நிர்வாகிகளும் பேட்டி அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் , 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாகவும் , ' கிரேடு ' முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.இதையடுத்து , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு , பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் , ' மெமோ ' அனுப்பியுள்ளார் .


அரசின் உத்தரவை மீறியும் , அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியும் செயல்பட்டதாக கூறி , 15 நாட்களுக்கு விளக்கம் அளிக்க , பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இந்த நடவடிக்கைக்கு , இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன .


Recommend For You

Post Top Ad