உச்சத்தை தொட்டது தங்கம் விலை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, June 13, 2020

உச்சத்தை தொட்டது தங்கம் விலை




சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.


இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.9 உயா்ந்து, ரூ.4,535-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.53.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.53,500 ஆகவும் இருந்தது.


வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,535

1 பவுன் தங்கம் ..................... 36,280

1 கிராம் வெள்ளி .................. 53.50

1 கிலோ வெள்ளி ................. 53,500

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,526

1 பவுன் தங்கம் ..................... 36,208

1 கிராம் வெள்ளி .................. 53.90

1 கிலோ வெள்ளி ................. 53,900

Post Top Ad