அரசு ஊழியர்களுக்கு “செக்" தலைமைச்‌ செயலாளர் அரசாணை - Asiriyar.Net

Thursday, June 18, 2020

அரசு ஊழியர்களுக்கு “செக்" தலைமைச்‌ செயலாளர் அரசாணை



ஊர டங்கு காலத்தில்‌ அரசு ஊழியர்களின்‌ விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்‌ கூறியிருப்பதாவது:

முழு கட்‌ டுப்பாடுகளுடன்‌ கூடிய ஊரடங்கு அறிவிக்கப்‌ பட்ட மார்ச்‌ 23 முதல்‌ மே 17 வரை பணிக்கு வராத அரசு ஊழியர்‌ கள்‌, பணிக்கு வந்ததாக கருதப்படுவர்‌. மே 18-ம்‌ தேதிக்குப்‌ பின்‌ 50 சத வீத பணியாளர்களுடன்‌ சுழற்சி முறையில்‌ அரசு அலுவலகங்கள்‌ செயல்‌பட்ட போது, குறைந்த பட்ச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்‌ பட்டும்‌, பணிக்கு வரவில்‌ லையென்றால்‌ அது விடுப்‌ பாகவே கருதப்படும்‌. 


மே18-ம்தேதிக்குப்‌ பின்‌ விடுப்பில்‌ இருந்த ஊழியர்‌ கள்‌ அதற்கான விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்‌ பிக்க வேண்டியது கட்டா யம்‌. கொரோனா ௮ல்‌ லாத வேறு வகையான மருத்துவ காரணங்களுக் காக யாரேனும்‌ விடுப்பு எடுத்திருந்தால்‌ அதற்‌கான மருத்துவச்‌ சான்றை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்‌. 


கொரோனா அறிகுறிஇருந்து விடுப்பில்‌ இருந்தாலோ, அல்லது குடும்பத்தினரில்‌ யாருக்‌ கேனும்‌ கொரோனா அறி குறி இருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு பகுதியில்‌ வசித்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால்‌ அது ஊதியப்‌ பிடித்தம்‌ இல்லாத சிறப்பு விடுப்பாக கருதப்ப டும்‌. 

கர்ப்பிணிப்‌ பெண்‌கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ அலுவலகம்‌ வரவில்லை யென்றாலும்‌ அது பணிக்‌ காலமாகவே கருதப்படும்‌. தமிழக அரசின்‌ அனைத்து வகை ஊழியர்கள்‌, பேரா சிரியர்கள்‌, பணியாளர்க ளுக்கு இது பொருந்தும்‌. இவ்‌ வாறு அந்த அரசாணையில்‌ கூறப்‌பட்டுள்ளது.



Post Top Ad