மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதுமையான திட்டம்: அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, June 22, 2020

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு புதுமையான திட்டம்: அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு




கண்டுபிடிப்பில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் புதுமையான திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

 பெரும்பான்மையான இந்தியர்களுக்கு, மைண்ட் (MIND- Massive Indian Novelty Depository) என்ற பெயரில் புதுமையான திட்டமாக இது இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புத்தாக்கக் கண்டுபிடிப்புப் பிரிவின் துணையுடன் வியக்கத்தக்க முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதில் கலந்துகொள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 கண்டுபிடிப்புகளால் கட்டாயம் மாற்றத்தை நிகழ்த்த முடியும். நாளை மதியம் 12 மணிக்கு இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது’’ என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


 எனினும் இது என்ன மாதிரியான செயல்திட்டம் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

 இந்நிகழ்வில் மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், ஏஐசிடிஇ தலைவர் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

 இதற்கிடையே அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுத் தேதிகள் குறித்தும் மீதமுள்ள சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளின் நிலை குறித்தும் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad