6 - 9ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இரண்டு பருவ மதிப்பெண்களை பதிவிட வேண்டும் - திருத்திய அறிவுரைகள் - CEO Proceedings - Asiriyar.Net

Wednesday, June 17, 2020

6 - 9ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் இரண்டு பருவ மதிப்பெண்களை பதிவிட வேண்டும் - திருத்திய அறிவுரைகள் - CEO Proceedings


நாகப்பட்டினம்‌ முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌

ந. ௧. எண்‌. 2900/இ4/2020, நாள்‌.16.06.2020.

பொருள்‌ கல்வி - இடைநிலைக்கல்வி 2019-2020ஆம்‌ கல்வி ஆண்டு - 6முதல்‌ 9 வகுப்புகள்‌

தேர்வு முடிவுகள்‌ சரிபார்த்தல்‌ மற்றும்‌ வெளியிடுதல்‌ - தேர்வு "முடிவுகள்‌ சரிபார்க்கும்‌ அலுவலர்கள்‌ நியமனம்‌ செய்தல்‌ - திருத்திய அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு

பார்வை 1.அரசாணை (நிலை எண்‌ 54, பள்ளிக்‌ கல்வி (அதேதுறை நாள்‌: 09.06.2020.

2.சென்னை 6 பள்ளிக்கல்வி இயச்‌ ்‌ செயல்முறைகள்‌ :
ந.க.எண்‌:0089/கே/இ!/2020 நாள்‌: 11.06.2020.

3. இவ்வலுவலக இதே எண்ணிட்ட செயல்முறைகள்‌ நாள்‌ 15.06.2020.




பார்வை (3ல்‌ குறிப்பிட்டுள்ள இவ்வலுவலக செயல்முறைக்‌ கடிதத்திற்கு அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை பள்ளித்‌ தலைமை ஆசிரியர்‌/(முதல்வர்களின்‌ தனிக்‌ கவனம்‌ ஈர்க்கப்படுகிறது. 18.06.2020 அன்று நடைபெறவிருந்த தேர்ச்சி முடிவுகள்‌ சரி பார்ப்புக்‌ குழு கூட்டம்‌ பின்னர்‌ நடைபெறும்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.


பார்வை () மற்றும்‌ (2ல்‌ குறிப்பிட்டுள்ள அரசாணை மற்றும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றின்‌ காரணமாக 2019-2020ஆம்‌ கல்வியாண்டிற்கான 6முதல்‌ 9ம்‌ வகுப்பு பள்ளி இறுதித்‌ தேர்வுகள்‌ அரசால்‌ ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும்‌ தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்‌ தேர்ச்சி விவரத்தை பார்வை (3ல்‌ குறிப்பிட்டுள்ள இவ்வலுவலக செயல்முறைக்‌ கடிதத்துடன்‌ இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்களில்‌ இரண்டு பருவ மதிப்பெண்கள்‌ மட்டும்‌) பதிவு செய்து பள்ளியில்‌ தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க அனைத்து வகை தலைமை ஆசிரியர்‌/ முதல்வர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.



வழிகாட்டுதல்கள்‌:

1. பள்ளி வருகை பதிவேட்டில்‌ பதிவில்‌ உள்ள அனைத்து மாணவர்களும்‌ தேர்ச்சிக்கு தகுதியானவர்கள்‌ ஆவார்கள்‌.

2 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 8 ஆம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்கள்‌ தேர்ச்சி அறிக்கையில்‌ (முதல்‌ பருவம்‌ மற்றும்‌ இரண்டாம்‌ பருவம்‌) மதிப்பெண்கள்‌ மட்டும்‌ பதிவு செய்யவும்‌, மூன்றாம்‌ பருவம்‌ மற்றும்‌ இறுதி தர நிலை பதிவுகள்‌ தேவையில்லை,

3. 9 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும்‌ அரையாண்டு மதிப்பெண்கள்‌ மட்டும்‌ பாட வாரியாக பின்வரும்‌ படிவத்தில்‌ பதிவிடவேண்டும்‌. 



Post Top Ad