ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: கல்வியியல் பல்கலை. தகவல் - Asiriyar.Net

Post Top Ad

Wednesday, May 13, 2020

ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்: கல்வியியல் பல்கலை. தகவல்
விடியோ, குரல் பதிவு வடிவில் பாடங்களைத் தயாரிக்கும் ஆசிரியா்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வீட்டில் இருக்கும் மாணவா்களுக்கு, விடுமுறை நாள்கள் பாதிக்காத வகையில், ஆன்லைனில் பாடம் நடத்த ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், அனைத்து வகை ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகளுக்கும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘கல்வியியல் கல்லூரி மாணவா்களுக்கு, ஆன்லைனில் பாடங்களை நடத்தும் வகையில், விடியோ, குரல் பதிவு (ஆடியோ) வடிவில் பாடங்களை ஆசிரியா்கள் தயாரித்து, கல்வியியல் பல்கலைக்கு, முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும், ஆன்லைன் பாடங்களைத் தயாரித்து, பல்கலைக்கழகத்துக்கு வழங்குவோருக்கு, பல்கலைக்கழகம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad