15.05.2020 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் CEO - களுடன் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்வின் முழு விபரம். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 18, 2020

15.05.2020 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் CEO - களுடன் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்வின் முழு விபரம்.



15.05.2020 அன்று உயர்திரு பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்வில் ஜூன் 2020 ல் நடைபெறவுள்ள இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வுகள் தொடர்பாக வழங்கப்பட்ட / தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

 அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பபள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் பின்வரும் அறிவுரைகளை தவறாது பின்பற்றி தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செம்மையான முறையில் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பொதுவான அறிவுரைகள்

1. ஜூன் 1 முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதால் மாணவர்கள் அவர்தம் பள்ளியிலேயே தேர்வெழுதும் பொருட்டு அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளது .

2. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே நடைபெறும் என்பதை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உடன் தெரிவித்திட வேண்டும் .

3. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பழைய தேர்வு கால அட்டவணையில் கணக்குப்பாடத்திற்கான தேர்வு இறுதி நாள் தேர்வாக உள்ளது ஆனால் புதிய தேர்வு கால அட்டவணையில் கணக்குப்பாடத்திற்கானத்தேர்வு 05.06.2020 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக வருகிறது இதனை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து மாணவர்களுக்கு தெரியபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்

4. மாணவர்கள் தேர்வெழுத தேர்வறையில் சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் .

5. பள்ளிக்கல்வித்துறை தொடக்கக்கல்வி / மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப்பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

6. அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட ) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது பணிபுரியும் மாவட்டத்திற்கு 21.05.2020 க்குள் வந்து இருக்க வேண்டும் .

7. அனைத்து பள்ளிகளும் தேர்வு மையமாக செயல்பட உள்ளதால் ஏற்கனவே ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களாக உள்ள தேர்வு மையங்கள் முதன்மை தேர்வு மையங்களாகவும் , அத்தேர்வு மையத்தில் தேர்வெழுதும் இணைப்பு பள்ளிகள் அனைத்தும் துணை தேர்வு மையங்களாகவும் செயல்பட வேண்டும் .

8. அனைத்து தொடக்கல்வி ( தொடக்க மற்றும் நடுநிலை ) பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இத்தேர்வுப்பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள் எனத் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களால் தெரிவித்துள்ளதால் ஆசிரியர் சார்பான விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்தி தேர்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

9. கட்டுப்படுத்தப்பட்ட ( Containment Zone or Area ) பகுதியிலுள்ள தேர்வு மையங்கள் விவரம் சேகரிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது .

10. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மாணவர்களை கண்டறிய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

11. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து மாணவர்கள் எவரேனும் தேர்வுக்கு வருகை ( Containment Zone or Area ) புரியும் பட்சத்தில் அவர்களின் வசதிக்காக வட்டாரத்திற்கு இரண்டு சிறப்பு தேர்வு மையங்கள் ( Special Exam Centre ) அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது .

12. 10 மற்றும் 11 ஆம் பொதுத் தேர்வு எழுதும் முகப்புத்தாட்களில் உரிய தேர்வு நாள் விவரத்தினை ( முதன்மை தேர்வு மையம் ) தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மட்டுமே மாற்றம் செய்யப்பட வேண்டும் மைய

தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் 

1. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ஜூன் திங்களில் நடைபெறவுள்ள தேர்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கீழ்கண்டவாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

2.1.1 ) மாணவர்களுக்குரிய தேர்வு அறைகள் மற்றும் இருக்கை வசதிகளை சுகாதாரமாகவும் , தூய்மையானதாகவும் சுத்தப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது

2.1.2 ) தேர்வு மையம் செயல்படும் பகுதியின் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி அலுவலர்களை தொடர் கொண்டு அப்பகுதிகளின் தூய்மை பணியாளர்களின் உதவியுடன் தேர்வு மையத்தினை கிருமிநாசினி கொண்டு தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளன்றும் தூய்மைபடுத்திடவும் தெரிவிக்கப்பட்டது

2.1.3 ) தேர்வு மையங்களில் மின்சாரம் , குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருத்தல் வேண்டும் என அனைத்து தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

2.1.4 ) தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு வருகை புரியும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணிந்திருத்தல் வேண்டும் . மேலும் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

2. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தற்போது தான் பயிலும் மாவட்டத்தில் இருப்பதை முதலில் சார்ந்த தலைமை ஆசிரியர் / முதல்வர் அடங்கிய பள்ளி குழு வாயிலாக உறுதி செய்திட வேண்டும் . அவ்வாறு இல்லாமல் பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களில் தற்போது இருப்பின் அதன் விவரங்களை உடனடியாக பின்வரும் Link யை பன்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிப்பதோடு , அவர்களுக்கு Tn - e pass ஆன்லைன் வழியாக உடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுப்புமாறும் தெரிவிக்கப்படுகிறது .

3. மாணவர்கள் தேர்வெழுத தேர்வறையில் சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் போதுமான இடவசதி பள்ளியில் உள்ளதா என்பதனையும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்திட வேண்டும் .

4. மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வுகள் நடைபெறும் என்பதால் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பின்வறுமாறு கீழ்க்குறிப்பிட்டுள்ள Link பயன்படுத்தி உடனடியாக பதிவேற்றம் செய்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வர் அறிவுறுத்தப்படுகிறார்கள் .
a . வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட / கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் விவரம்
b . பள்ளியில் தேர்வெழுதும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை விவரம் ( ஆண் மற்றும் பெண் தனித்தனியாக )
C. வெளியூர் / பிற மாவட்டம் / பிற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் விவரம்
d . விடுதியில் தங்கி பயில்வோர் விவரம்
e . ஒரு அறைக்கு 10 மாணவர்கள் வீதம் அவர்தம் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அறைகள் உள்ளனவா என்பதற்கான விவரம்....

15.05.2020 அன்று உயர்திரு பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்வின் முழு விபரம்.

Post Top Ad