இருமல் வந்தாலே கொரோனா வைரஸா இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க. - Asiriyar.Net

Post Top Ad


Friday, April 17, 2020

இருமல் வந்தாலே கொரோனா வைரஸா இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.

தலைவலி அதிகமா இருக்கா? நெஞ்சு இறுக்கமா இருக்கா? தொண்டையில் அரிப்பு இருக்கா? எதனால் உங்களுக்கு இருமல் வருகிறது என்று ஏதாவது கவனித்தீர்களா? ஒருவேளை இது கொரோனா வைரஸினால் ஏற்படும் COVID -19 ஆக இருக்குமோ? அல்லது வெறும் அலர்ஜியாக இருக்குமோ?

சதா எந்நேரமும் கொரோனா பற்றிய செய்திகள், தகவல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஏதாவது படித்துக் கொண்டோ அல்லது பார்த்துக் கொண்டோ இருப்பதால் தோன்றக்கூடிய சாதாரண ஒருவித மனபிராந்தி என்றே இதனை கூற வேண்டும். பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி ஒருவருக்கு சில அலர்ஜிகள் ஏற்படுவது இயல்பு தான். சாதாரண அலர்ஜியா அல்லது COVID-19 உடைய அறிகுறிகளா என்று முதலில் ஆராய வேண்டியது முக்கியம்.

இருமல், தலைவலி, தொண்டை வலி, காய்ச்சல், சுவாச பிரச்சனை, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் உடனடியாக 1075 என்ற எண்ணிற்கு உடனடியாக கால் செய்யுங்கள். ஆனால், சளி, அலர்ஜி மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவை ஒரே நேரத்தில் கூட ஏற்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

...

சில அறிகுறிகள் இவற்றை வெளிப்படையாக தெரியப்படுத்தினாலும் கூட, சில முக்கிய விதிவிலக்குகளும் உள்ளன. எனவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இருமலை குறித்து ஆராய்வதற்கு முன்பு, உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய 5 கேள்விகளை தற்போது உங்கள் சொல்லப் போகிறேன். இவற்றை தெளிவுப்படுத்திக் கொண்டு பின்னர், அடுத்த நடவடிக்கையில் இறங்கவும்.

இருமல் வந்தாலே கொரோனா வைரஸாக இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.
உடலின் வெப்பநிலை
தற்போது உலக அளவில் அதிகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸை பொறுத்தவரை, அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரது உடலின் வெப்பநிலை, சராசரியாக 100.4°F-க்கும் அதிகமாக இருக்கும். அதுவே, வேறு ஏதாவது அலர்ஜியாக இருந்தால் எப்போதாவது அதிகப்படியான வெப்பநிலையை தூண்டும்.


இருமல் வந்தாலே கொரோனா வைரஸாக இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.
மூக்கடைப்பு

சாதாரண அலர்ஜி மற்றும் கொரோனா வைரஸ் இரண்டுமே இருமலை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால், கொரோனாவால் ஏற்படக்கூடியது வறட்டு இருமல். அதுவே, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதலுக்கு பின்பு ஏற்பட்டால் அது அலர்ஜி. COVID-19ஐ பொறுத்தவரை மூக்கடைப்பு அல்லது மூச்சுக்குழாயில் கீறல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இது மிகவும் அசாதாரணமானது என்பது நிபுணர்களின் கூற்றாகும்.


இருமல் வந்தாலே கொரோனா வைரஸாக இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.
அரிப்பு

உங்களுக்கு அரிப்பு பிரச்சனை உள்ளதா? அது உடலில் எங்கு வேண்டுமானாலு ஏற்படக்கூடும். அதாவது, தொண்டை, சருமம், மூக்கு, கண்கள். அவை அனைத்தும் அலர்ஜியின் அடிப்படை அறிகுறிகளாகும். இவற்றிற்கும் கொரோனா தொற்றிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.


இருமல் வந்தாலே கொரோனா வைரஸாக இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.
மாறுபட்ட அறிகுறிகள்

கிட்டதட்ட ஒரே நாளில் அறிகுறிகளானது தொடர்ந்து மாறிகொண்டே இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியெனில் அது வெறும் அலர்ஜி மட்டுமே. உதாரணத்திற்கு, மைக்ரோஸ்போர்ஸ் பகலில் உச்சத்தில் இருக்கும். அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மோசமான அறிகுறிகளை சந்திக்க நேரிடும். பகல் நேரத்தில் வெளியே செல்லாமல் இருந்தால் கூட, இது ஏற்படக்கூடும். ஏனென்றால், அவை காற்றின் மூலமாகவோ, தனித்து இருக்க தவறுவதாலோ அல்லது செல்லபிராணிகள் மூலமாகவோ ஏற்படக்கூடும். கொரோனா வைரஸை பொறுத்தவரை, அவற்றின் அறிகுறி பகலில் எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.இருமல் வந்தாலே கொரோனா வைரஸாக இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.
அலர்ஜி மாத்திரைகள்

ஜைர்டெக், அலெக்ரா மற்றும் கிளாரிடின் போன்ற நீண்டகால ஆண்டிஹிஸ்டமின்கள், சளி மற்றும் அலர்ஜி இரண்டிற்குமே ஏற்றவை. இவற்றை எடுத்துக் கொண்ட பின் அறிகுறிகள் குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் அது நல்லதொரு அறிகுறியாகும். அதற்கு கொரோனா தொற்று இல்லை என்பதே அர்த்தம்.


உங்களுக்கு இருப்பது வெறும் அலர்ஜி என்றால், உங்கள் வீட்டில் அலர்ஜி ஏற்படுவதை கட்டுப்படுத்துங்கள். அதாவது ஒரு காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை வாங்கலாம், உங்களுக்கான தனிமையான இடத்தை மாற்றலாம், மெத்தை விரிப்பை மாற்றலாம், செல்லப்பிராணிகளை சுத்தம் செய்யலாம். இவற்றை செய்வதன் மூலம் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவது குறைகிறதா என்று பாருங்கள்.


இருமல் வந்தாலே கொரோனா வைரஸாக இருக்குமோ என்று பயம் ஏற்படுதா? அப்ப இத படிங்க தெளிவாகிடுவீங்க.
இருப்பினும், மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால்...

இப்போதே, சுவாச கோளாறுகளான மூச்சுத்திணறல், இருமல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற எதுவாக இருந்தாலும் உடனடியாக ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். சுவாச கோளாறுகள் ஏதாவது ஏற்படுமாயின் முதலில் மேலே கூறப்பட்டுள்ள சில கேள்விகளை உங்களுக்குள் நீங்களே கேட்டு பதிலை கண்டறிந்து, அவை அலர்ஜியின் அறிகுறிகளாக என்பதை முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். அவை இல்லை எனும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
Recommend For You

Post Top Ad