இனி மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் இந்த தண்டனை தான்! எச்சரிக்கும் அரசு - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, April 22, 2020

இனி மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் இந்த தண்டனை தான்! எச்சரிக்கும் அரசு
மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என்று மத்திய, மாநில அரசுகள்  எச்சரிக்கை விடுத்தன.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது;-

 மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தினால் 6 மாதம்  மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சிறை தண்டனையுடன் ரூ. 1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபாதம் விதிக்கப்படும்.  மருத்துவ பணியாளர்களின் வாகனமோ, கிளினிக்குக்ளோ சேதப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விட இரு மடங்கு தொகை இழப்பீடாக அளிக்கப்படும்.

 மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்பான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படது. மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் குற்றவியல்  தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும்” என்றார்.

Recommend For You

Post Top Ad