ஏப்ரல் 20 க்கு பிறகு பணிக்கு செல்லப்போவோர் கவனிக்க வேண்டிய நெறிமுறைகள்: விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு - Asiriyar.Net

Post Top Ad


Thursday, April 16, 2020

ஏப்ரல் 20 க்கு பிறகு பணிக்கு செல்லப்போவோர் கவனிக்க வேண்டிய நெறிமுறைகள்: விவரத்தை வெளியிட்டது மத்திய அரசு


நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20ம் தேதி வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் மோடி கூறியிருந்தார்.அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதில், ஏப்ரல் 20ந்தேதி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் அவை ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


ஏப்ரல் 20 முதல் அனைத்து வித விவசாய பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதேபோன்று தோட்ட தொழிலுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஏப்ரல் 20 க்கு பிறகு பணிக்கு செல்லப்போவோர் கவனிக்க வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* பொதுவெளியிலும், பணியிடங்களிலும் அனைவரும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

* பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடக்கூடாது.

* மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, திருமணம் , இறுதி சடங்கு நிகழ்வுகளில் ஒன்று கூடுவதை கடைபிடிக்க வேண்டும்.

* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.

* மது விற்பது, குட்கா,புகையிலை பொருட்களை விற்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புகையிலை மென்று துப்பினால் தண்டனை விதிக்கப்படும்.

* பணி இடங்களில், சானிடைசர், வெப்பம் கணக்கிடுதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

* பணி இடங்களில் ஷிப்ட் மாறும் போது, ஒருமணி நேரம் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

* 65 வயதுக்கு மேற்பட்டோர், 5 வயதுகுட்பட்ட குழந்தைகளின் பெற்றோர், நோய் உடையோர் வீட்டில் இருந்த பணி செய்ய நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும்.

* ஆரோக்ய சேது ஆப்பை பயன்படுத்த அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.

* ஒவ்வொரு ஷிப்ட் மாறும் போது, நிறுவனங்கள் பணி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

* அதிகம் பேர் கூடும் மீட்டிங் நடத்த கூடாது.Recommend For You

Post Top Ad