அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அதிருப்தி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 20, 2019

அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட அனுமதி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அதிருப்தி





சென்னை

அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாடுகளில் தொண்டு நிறுவ னங்கள் ஈடுபடுவதற்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் இடையே அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் நிர்வாகரீதியாக பல்வேறு மாற்றங் கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அரசுப் பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாடுகளில் தொண்டு நிறுவனங்களை ஈடு படுத்த கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப் பன், அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிப் பணி களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், அதற்கான அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு புகார்கள் வருகின்றன.

இதைத் தவிர்க்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங் கும் விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களே இனி முடிவு செய்து கொள்ளலாம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தாக்கப் பயிற்சி, கற்றல் உபகரணங்கள் வழங்குதல், தன்னார்வலர்கள் மூலம் கற்பித்தல், விளையாட்டுப் பயிற்சி, சுகாதார பரிசோதனை உட்பட பணிகளை மேற்கொள்ள அணுகும் தொண்டு நிறுவனங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள் ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முதன்மைக் கல்வி அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும்.

அரசு அனுமதித்தபடியே...

அதேநேரம் பள்ளிகளில் தொண்டு நிறுவனங்கள் மேற் கொள்ளும் வளர்ச்சிப் பணிகளால் அன்றாட கற்பித்தல் நிகழ்வுகள், தேர்வுப் பணி, மாணவர் உடல்நலம் ஆகியவை பாதிக்கக்கூடாது. இந்த பணிகளின்போது அரசு அனுமதித்த கற்பித்தல் உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதே நடைமுறைகள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் மேற்கொள்ளும் பணிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் பி.கே.இளமாறன் கூறும்போது, ''தமிழக அரசின் சமீப கால செயல்பாடுகள் அரசுப் பள்ளிகளை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்விதமாக உள்ளன. பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தொண்டு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், கற்பித்தல் பணிகளில் தொண்டு நிறு வனங்களை ஈடுபடுத்தினால் மாண வர்கள் கற்றல் திறன் பாதிக்கப் படுவதுடன், ஆசிரியர்கள் மீதான நம்பகத்தன்மை குறைய வாய்ப் புண்டு.

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் இருப்பதை முன்னதாகவே அமல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டு வது ஏற்புடையதல்ல. அரசுப் பள்ளிகளை காப்பாற்ற கல்வித் துறை முன்வர வேண்டும்'' என்றார்.

Post Top Ad