டி.வி விலை குறைகிறது... இறக்குமதி வரி நீக்கத்தால் அடித்த அதிர்ஷ்டம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 20, 2019

டி.வி விலை குறைகிறது... இறக்குமதி வரி நீக்கத்தால் அடித்த அதிர்ஷ்டம்!





LED டிவிக்களுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டதால் இந்தியாவில் டி.வி விலை கடுமையாகக் குறையும் எனக் கூறப்படுகிறது.

LED டிவி பேனல்களுக்கான இறக்குமதி வரியை 5 சதவிகிதத்திலிருந்து 0% ஆக கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சகம் குறைத்தது. இதற்கு டிவி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்தியில் கடும் வரவேற்பு உள்ளது. இதுகுறித்து இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மொஹிந்திரோ பாராட்டுத் தெரிவித்துப் பேசியுள்ளார்.

பங்கஜ் கூறுகையில், "அரசின் இப்புதிய அறிவிப்பின் மூலம் கள்ளச்சந்தை மீதான கண்காணிப்பு அதிகரிக்கும். முறையாக உற்பத்தி செய்வோருக்கு நல்ல பலன் கிடைக்கும்.



டிவி பேனல் உற்பத்தி செய்வதற்கான சுங்கத்துறை வரியையும் அரசு குறைத்துள்ளது பாராட்டுக்குரியது. அரசின் இந்த சலுகையால் டிவி உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 4 சதவிகித விலைக்குறைப்புடன் இனி டிவி விற்பனை செய்ய முடியும். இனி வரும் காலங்களில் புதிய அப்டேட்-க்கு ஏற்ப மக்கள் நல்ல குறைவான விலையில் எல்இடி டிவிக்களை வாங்க முடியும். விரைவில் இந்தியா டிவி துறையில் மிகச்சிறந்த ஏற்றுமதி மையமாகவும் வளரும்" என்றார்.

Post Top Ad