அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ரத்து செய்யகோரிய வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீதம் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் தனது பெயர் இடம்பெறவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment