பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிப் பண்புகள் விதிமுறைகள் - Govt Letter - Asiriyar.Net

Thursday, July 14, 2022

பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிப் பண்புகள் விதிமுறைகள் - Govt Letter

 

பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப் பண்புகள் குறித்த வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கடிதம்!


  • காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
  • பள்ளிக்கு உரிய நேரத்தில் வருதல் வேண்டும்.
  • பள்ளிக்கு நாள்தோறும் சீருடையில் மட்டும் வருதல் வேண்டும்.
  • மாணவர்கள் தத்தம் வகுப்பு அறை மற்றும் பள்ளி வளாகத்தினைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
  • மாணவர்கள் கையேட்டினை நாள்தோறும் தவறாமல் பள்ளிக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
  • தினந்தோறும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களைப் பாடவாரியாக மாணவர்கள் கையேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.
  • கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை அந்தந்தப் பாட ஆசிரியர்களிடம் நிறைவு செய்து தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பள்ளியின் உடைமைகளைப் பாதுகாத்திடல் வேண்டும்.
  • பள்ளித் தேர்வு நாட்களில் விடுப்பு எடுப்பதைத் தவிர்த்திடல் வேண்டும்.
  • தவிர்க்க இயலாத காரணத்தால் விடுப்பு எடுக்க நேரிடின், விடுப்புக் கடிதம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள் வகுப்பிற்குள் நுழையும்போது அமைதியாக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
  • அமைதியாகவும், பணிவாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
  • பேச்சு, செயல், எண்ணம் இவற்றில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
  • பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
  • பள்ளியில் செயல்படும் இணைச் செயல்பாடுகளில் தவறாமல் கலந்து கொள்ளுதல் வேண்டும்.
  • கைபேசியை எக்காரணம் கொண்டும் பள்ளிக்குச் கொண்டு வருதலைத் தவிர்த்தல் வேண்டும்.
  • மாணவர்களின் பாதுகாப்பினைக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • தலைமையாசிரியர் / வகுப்பாசிரியரின் அனுமதியில்லாமல் பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியில் செலுத்தல் கூடாது.

ஆதாரம் : தமிழக அரசு - பள்ளிக் கல்வித் துறை























Post Top Ad