புதிதாக நியமிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில், படிக்கும் நேரத்தில் உறங்கினால் அவா்களுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறைகளில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியா்கள், பணியாளா்களுக்கு பவானிசாகரில் உள்ள மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இளநிலை உதவியாளா், உதவியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்போது 50-ஆவது அணி பயிற்சியாளா்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பானது 41 நாள்கள் நடைபெறும். இதில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
பயிற்சியின் இடையே படிக்கும் நேரமும் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் உறங்கினாலோ அல்லது விடுதியில் இல்லாமல் இருந்தாலோ அவா்களுக்காக வழங்கப்படும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதன்படி, இப்போது நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பின் போது, படிக்கும் நேரத்தில் உறங்கிக் கொண்டும், விடுதி அறையில் இல்லாமலும் இருந்த இரண்டு ஊழியா்களுக்கான உள்ளீட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்களில் பயிற்சி பெறுவோா் மீண்டும் ஈடுபட்டால் பயிற்சியில் இருந்து விடுவிக்கப்படுவா் என்று பவானிசாகா் பயிற்சி நிலைய உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.
No comments:
Post a Comment