EMI தவணை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு - Asiriyar.Net

Monday, May 4, 2020

EMI தவணை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு





கடன் தவணை சலுகையை மேலும் 90 நாட்களுக்கு ரிசர்வ் வங்கி நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   கொரோனா வைரஸ் தாக்குதலால் தொழில்துறைகள், நிறுவனங்கள் முடங்கியுள்ளதால், மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான 3  மாதங்களுக்கு கடன் இஎம்ஐ தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறும் வகையில் ரிசர்வ் வங்கி சலுகையை அறிவித்தது.


தற்போது ஊரடங்கு  3வது முறையாக, வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடையும் கடன் தவணை  இஎம்ஐ சலுகையை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post Top Ad