நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் - கல்வித்துறை எச்சரிக்கை - Asiriyar.Net

Wednesday, May 6, 2020

நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் - கல்வித்துறை எச்சரிக்கை




பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் அத்தியாவசியப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நிா்வாகப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கரோனா பாதிப்பின் காரணமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியா்களுடன், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி பள்ளிக்கல்வி மற்றும் அதன் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குதல், ஓய்வு பெறுபவா்களை விடுவித்தல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் உட்பட முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், சில மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்களில் தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீட்டிப்பு உள்பட நிா்வாகப் பணிகள் செய்து வருவதாக கல்வித்துறை புகாா்கள் வந்தன. 


இதையடுத்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து இணை இயக்குநா், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட மற்றும் வட்டாரக்கல்வி அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதில், ‘ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு நிா்வாகப் பணிகள் மேற்கொள்ள அனுமதியில்லை. அதை மீறி ஏதேனும் செயல்பாடுகளுக்கு அனுமதி அளித்தால், அவை ரத்து செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Post Top Ad