10ம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்கே பேருந்து இயக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Asiriyar.Net

Wednesday, May 13, 2020

10ம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்கே பேருந்து இயக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி




தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் 10ம் தேதி – சமூக அறிவியல், ஜூன் 6ம் தேதி – விருப்ப மொழிப்படம், ஜூன் 12ம் தேதி – தொழிற்பாடம் நடைபெறும் அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,' என பதிவிட்டுள்ளார்.

Post Top Ad