10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Asiriyar.Net

Friday, May 15, 2020

10ம் வகுப்பு தேர்விற்கு தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு





10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு

* பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

* வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும்- நீதிபதிகள் கேள்வி

* மனு தாரர் வாபஸ் பெற அனுமதி கோரியதை அடுத்து வழக்கு தள்ளுபடி

தமிழகத்தில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையையும் வெளியிடப்பட்டது.


கொரோனா தாக்கம் குறைந்த பிறகு 10ம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்த தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது, தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



Post Top Ad