10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 4, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு!தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3  வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது .


தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது. 

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நாடு முழுவதும் 3வது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடபடும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

Post Top Ad