10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் வெளிமாவட்ட மாணவர்கள் இடர்பாடுகள் - 19 ஆம் தேதி விவரம் அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Thursday, May 14, 2020

10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் வெளிமாவட்ட மாணவர்கள் இடர்பாடுகள் - 19 ஆம் தேதி விவரம் அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்




வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து வருகின்ற 19 ஆம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :


தமிழகம் அரசின் நடவடிக்கைகளால் கரோனா இறப்பு எண்ணிக்கையில் குறைந்த மாநிலமாக உள்ளது . ஈரோடு மாவட்டம் மக்களின் ஒத்துழைப்பால் கடந்த 29 நாட்களாக புதிதாக கரோனா தொற்று எதுவும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு யுடியூப் , கல்வி சேனல் ஆகியவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது . 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது.

Post Top Ad