வங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்... அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..! - Asiriyar.Net

Wednesday, October 2, 2019

வங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்... அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..!



சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் இந்த வங்கிகள் அனைத்திற்கும் பணி நேரம் பொதுவாக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பல வங்கிகள் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தங்களது வசதிக்கேற்ப பணி நேரத்தை கடைபிடித்து வந்தன. இதனால், பொதுத்துறை வங்கிகள் அனைத்திற்கும் பொதுவான வேலை நேரத்தை நிதிச்சேவை துறை கொண்டு வந்துள்ளது.


இது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணியுடன் பணி நேரம் முடிவடைகிறது. உணவு இடைவேளை மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் நாகலாந்து மாநிலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும், மத்தியப்பிரதேசத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad