அடுத்த 2 மாதம் வங்கிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 30, 2019

அடுத்த 2 மாதம் வங்கிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை




நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெரு நகரங்களில் உள்ள வங்கிகள் குருனானக் ஜெயந்தி, கிருஸ்துமஸ் ஆகிய நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், பொதுத்துறை வங்கிகள், தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு, பிராந்திய, ஊரக மற்றும் உள்ளூர் வங்கிகள் ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல், மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. நான்கு பெரிய நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் விடுமுறை விடப்பட்டுள்ள நாட்கள் பற்றிய விவரம் வருமாறு' சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வங்கிகளுக்கு நவம்பர் 3ம் தேதி (ஞாயிறு) விடுமுறை தினம்.

நவம்பர் 9ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினம். நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை. நவம்பர் 12ம் தேதி குருனானக் ஜெய்தி, ரகசா பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா இந்த விழாக்களுக்காக டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10, 17, 24ம் தேதிகள் ஞாயிறு என்பதால் அன்று விடுமுறை, நவம்பர் 23ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை, டிசம்பர் மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய 5 நாட்கள் ஞாயிறு என்பதால் விடுமுறை. அதேபோல், 14 2வது சனிக்கிழமை, 28 நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை. 25ம் தேதி கிருஸ்துமஸ் என்பதால் விடுமுறை, என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Post Top Ad