மொழி ஆளுமையை பெற நாளிதழ் படிக்க வேண்டும் - Asiriyar.Net

Tuesday, September 10, 2019

மொழி ஆளுமையை பெற நாளிதழ் படிக்க வேண்டும்



'நாளிதழ்களை படித்தாலே, மொழி ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளலாம்,என, ரயில்வே, டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே, தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று நடந்த, மாணவ - மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ரயில்வே, டி.ஜி.பி., சைலேந்திர பாபு பங்கேற்றார்.அவர் பேசியதாவது: கல்வி என்பது, மிகப்பெரிய ஆயுதம். அதன் வழியே, உயர்ந்த பதவிகளை எட்ட முடியும்.பலருக்கு, ஆங்கிலம் பற்றிய, பயம் இருக்கிறது. உயர்ந்த பதவியை அடைய, ஆங்கிலமோ, ஏழ்மையோ தடையில்லை.இளம் தலைமுறையினர், எந்த துறையானாலும், முக்கிய தகுதியாக கருதப்படும் மொழி ஆளுமையை பெற, நாளிதழ்களை தொடர்ந்து படித்தாலே, அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம்.


இவ்வாறு, அவர் பேசினார்.

Post Top Ad