மாணவர்களுக்கு மட்டும் கிடையாது, ஆசிரியர்களுக்கும் 'இனிமே இது இலவசம்' தானாம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி! - Asiriyar.Net

Sunday, July 14, 2019

மாணவர்களுக்கு மட்டும் கிடையாது, ஆசிரியர்களுக்கும் 'இனிமே இது இலவசம்' தானாம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த தொடர்ந்து தமிழக அரசு முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகிறது. பல அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இருப்பினும் ஆசிரியர்கள் இணையம் மூலம் பாடம் நடத்தும் போது, அதற்கான போதிய வசதி இல்லாமலும், பெரும்பாலும் தங்களது செல்போன் மூலம் இன்டர்நெட்டை பயன்படுத்தி மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்.இந்நிலையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வகுப்பு வாரியாக மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad