அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த நீதிபதி... பாராட்டு குவிகிறது - Asiriyar.Net

Monday, July 15, 2019

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த நீதிபதி... பாராட்டு குவிகிறது




மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு மாஜிஸ்திரேட்டாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த ஜெயந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது கணவர் சிவராஜ். வக்கீல். இவர்களுக்கு சாக்யா, அசுரன் என 2 குழந்தைகள் உள்ளனர். மேலூரில் பணியில் சேர்ந்த உடன் தனது இரு குழந்தைகளையும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் சேர்க்க ஜெயந்தி அழைத்து வந்தார். தமிழ் வழி கல்வியில் சாக்யாவை 7ம் வகுப்பிலும், அசுரனை 5ம் வகுப்பிலும் இவர் சேர்த்தார். ஏழைகள் கடன் வாங்கியாவது தங்கள் குழந்தைகளை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்க நினைக்கும் இந்த காலத்தில் தனது 2 குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்த மாஜிஸ்திரேட் ஜெயந்தியின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

பெண் நீதிபதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Post Top Ad