கல்வி, 'டிவி'க்கு தனி அதிகாரி நியமனம் - Asiriyar.Net

Friday, July 26, 2019

கல்வி, 'டிவி'க்கு தனி அதிகாரி நியமனம்பள்ளி கல்வி துறையின் தொலைக்காட்சிக்கு, தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒரு திட்டமாக, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை, மாணவர்களுக்கு காட்டும் விதமாக, கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.

இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு, விரைவில் துவங்குவதற்கான ஏற்பாடுகளை, பள்ளி கல்வி துறை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், துார்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி, ஜெயலட்சுமி, கல்வி தொலைக்காட்சியின் நிர்வாக பொறுப்பில், சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குனராக உள்ள, பொன்.குமார், கல்வி தொலைக்காட்சியின், தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Post Top Ad