ஆசிரியருக்கு ஓர் இலக்கணம் ஜோதிமணி - Asiriyar.Net

Friday, July 12, 2019

ஆசிரியருக்கு ஓர் இலக்கணம் ஜோதிமணி
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்
15 ஆண்டுகள் பணிபுரிந்து,
மாறுதலில் செல்லும்பொழுது
பள்ளி மாணவர்கள் அழுது,
சக ஆசிரியர்கள் அழுது,
பெற்றோர்கள் அழுது,
ஊரே ஒன்று சேர்ந்து அழும்பொழுது,
அவரும் அழுது

யாரும் அழாதீர்கள்.நான் இன்னும் ஒரு மாங்குடியை உருவாக்கப்போகிறேன்
எனச் சொல்லி,
தான் பணிபுரிந்த பள்ளியில் வாசலில் விழுந்து கும்பிட்டு விடைபெற்ற ஆசிரியரின் கால்களில்
சக ஆசிரியர் விழுந்து கும்பிட்டு,
ஆசி வாங்கி் வழி அனுப்ப முடியும் என்றால் அவரது பெயர்தான்  ஜோதிமணி

புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி ஒன்றியம்
மாங்குடி ஊ.ஒ.ந.பள்ளியில்
அரசு கொண்டுவருதற்கு முன்பே
பல திட்டங்களை தன் பள்ளியில்
கொண்டுவந்து அழகு பார்த்தவர்..
கல்வியாளர்கள் சங்கமம் சார்பில்
தமிழக அளவில் சிறந்த பள்ளி என
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே
இப்பள்ளிக்கு விருது கொடுத்துப் பாராட்டி இருக்கின்றோம் என்னும் பெருமையோடு இப்பதிவைப் பகிர்கின்றேன்..தலைமை ஆசிரியர் திரு. ஜோதிமணி அவர்களுக்கு Asiriyar.net இன் வாழ்த்துக்கள்!!

Post Top Ad