டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஆசிரியர் பகவான் புதிய பள்ளியில் என்ன செய்கிறார்? - Asiriyar.Net

Friday, July 12, 2019

டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஆசிரியர் பகவான் புதிய பள்ளியில் என்ன செய்கிறார்?
ஆசிரியர் ஒருவருக்குப் பணிமாறுதல். அதனால், எல்லோரிடமும் விடைபெற்றுச் செல்லவிருக்கிறார். ஆனால், அவரைச் செல்ல விடாமல் மாணவர்கள் அழுதுகொண்டே விடைகொடுக்க மறுக்கின்றனர். மாணவர்கள் தம்மீது வைத்திருக்கும் அன்பால், ஆசிரியரும் கண்ணீர் வழிய நிற்கிறார். ஒரு கட்டத்தில் மாணவர்களை விலக்கிச் செல்லும்போது, ஆசிரியரைக் கட்டி அணைத்து, திரும்பவும் பள்ளிக்கே இழுக்கின்றனர். அந்த ஆசிரியரின் அழுகை இன்னும் அதிகமானது. அப்படிக் கண்ணீர் வழிய நின்றது ஆசிரியர் பகவான்.

பகவான்
"இப்போ வந்திருக்கிற ஸ்கூல், திருத்தணி பக்கத்துல அருங்குளம். பணி நிரவல்ல என்னை இங்கே டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. எங்க ஊருலேருந்து 45 கிலோமீட்டர் தூரம்.


இந்த ஸ்கூல்ல மாணவர் எண்ணிக்கை அதிகம். இந்த ஸ்டூடன்ட்ஸூம் 'சார் உங்கள டிவியில பார்த்தேன்' 'அந்த புக்ல உங்க போட்டோ பார்த்திருக்கேன் சார்'னு சொல்றாங்க. இங்கே வந்து கொஞ்ச நாள்லேயே பசங்க டக்குனு ஒட்டிக்கிட்டாங்க. அந்த ஸ்கூல் பசங்க போலவே இவங்களுக்கு சீக்கிரமே ரொம்ப நெருக்கமா பழகிடுவாங்கனு நினைக்கிறேன். நமக்கு எல்லா ஸ்டூடன்டஸூமே ஒண்ணுதானே!

ஸ்டூடன்ஸ்கிட்டேயிருந்து கிடைச்சிட்டு இருக்கிற அனுபவங்களை வெச்சி, ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். அதை அடுத்த வருஷம் ஜனவரியில வர்ற சென்னை புத்தகக் கண்காட்சி சமயத்துல வெளியிடணும்னு ஒரு திட்டம் இருக்கு." என்கிறார் பகவான்.

Post Top Ad