வேறு நெட்வொர்க்கிற்கு MNP செய்வது இனி ஈஸி! - Asiriyar.Net

Tuesday, December 18, 2018

வேறு நெட்வொர்க்கிற்கு MNP செய்வது இனி ஈஸி!


டிராயின் புதிய விதிகளின் படி தமிழ்நாட்டிற்குள் ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு இனி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும்.



மேலும், மற்ற தொலைத்தொடர்பு எல்லைக்குள் மாறுவதற்கு 4 நாட்கள் மட்டுமே ஆகும். முன்னதாக, இந்த முறைக்கு குறைந்தது 2 வாரங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


சியூஜி இணைப்பில் இருக்கும் மொபைல் எண்கள் மொத்தமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் இனி 100 எண்களை ஒரே நேரத்தில் மாற்றலாம்.


ஒரு நெட்வொர்க்கில் இருந்து வேறு நெட்வொர்க் மாறுவதற்கான விண்ணப்பத்தை நிராகரிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிராய் எச்சரித்துள்ளது.

Post Top Ad