அமெரிக்க நாசா காலண்டரில் பழநி மாணவரின் ஓவியம் - Asiriyar.Net

Sunday, December 23, 2018

அமெரிக்க நாசா காலண்டரில் பழநி மாணவரின் ஓவியம்





திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் - சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர் பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தலைப்பு கொடுத்து சர்வதேச அளவில் ஓவியப் போட்டிகளை நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள், காலண்டரில் இடம்பெறும்.
2019-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் 194 நாடுகளைச் சேர்ந்த 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இப் போட்டி யில் பங்கேற்றதில் தேன்முகிலனின் 'விண்வெளியில் உணவு' என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப் பட்டு நவம்பர் மாத காலண்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

Post Top Ad