'கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி - Asiriyar.Net

Friday, December 21, 2018

'கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி


கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 50 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இணைய தேடுபொறியான, 'கூகுள்' நிறுவனம், பள்ளி மாணவ - மாணவியரிடையே, 'அனிமேஷன்' செய்ய தேவையான அடிப்படை குறித்து, ஆண்டுதோறும், ஆன்லைன் தேர்வு நடத்துகிறது.ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம் நடைபெறும் இத்தேர்விற்கு, நாடு முழுவதும் ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், 50 பேர் பங்கேற்றனர்.கடந்த நவம்பரில் நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகள், இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.இதில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து பங்கேற்ற, 50 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட இப்பள்ளியில் பயிலும், ஏழை மாணவர்கள், 'கூகுள்' நிறுவன தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post Top Ad