போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர் & தலைமை ஆசிரியர்கள் இன்று (03.12.2018) செய்ய வேண்டியவைகள் - Asiriyar.Net

Monday, December 3, 2018

போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர் & தலைமை ஆசிரியர்கள் இன்று (03.12.2018) செய்ய வேண்டியவைகள்




ஆசிரியர்கள் அனைவரும் 3.12.18ஐ தேதி காலையில் முறையாக பள்ளிக்கு சென்று பதிவேட்டில் கையொப்பம் இட்டு மாலை 4.10 pm பிறகு சம்பந்தப்பட்ட வட்டார கலவி அலுவலகம் சென்று நமது பள்ளி சாவிகளை BEO /DEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்

அதேநேரத்தில்  ஆசிரியர. வருகைப் பதிவேடு மற்றும் முக்கியமான பதிவேடுகளை தலைமையாசிரியர் அறையில் வைத்து பூட்டி விட்டு மீதி உள்ள சாவிகளை மட்டும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் 


இதன் பிறகு அடுத்த நாள் காலை 10.00 am மணிக்கு அனைவரும் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள  BEO வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் ஒன்று திரட்டி செவ்வாய் காலை 9 மணி ஒன்பது மணிக்கு நமது வட்டார கல்வி அலுவலகம் முன்பு கூடுமாறு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். 

அவர்கள் அனைவரும் வந்த பின்பு இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்வை நடத்தி விட்டு வேறு ஏதேனும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக மாவட்ட  பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்ள  வேண்டும்.

Post Top Ad