அசரடிக்கும் தமிழகக் கல்வித்துறை YouTube கணக்கு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 21, 2018

அசரடிக்கும் தமிழகக் கல்வித்துறை YouTube கணக்கு!





தமிழ்நாட்டில் கல்வித்துறையில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்கள். விமர்சனங்கள் இருந்தாலும் "எதோ நடக்குதப்பா!" என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.




YouTube


தமிழகக் கல்வித்துறை சார்பில் 2016 ல் YouTube கணக்குத் துவங்கப்பட்டுக் குழந்தைகளுக்காகப் பாடல்கள் சேர்க்கப்பட்டன. குழந்தைகள் பாடல்களுக்கு எப்போதுமே அபார வரவேற்பு இருக்கும்.

YouTube ல் எந்த மொழி குழந்தைகள் பாடல் காணொளி என்றாலும் சென்று பாருங்கள், பார்வையாளர்கள் எண்ணிக்கை அசர வைக்கும்.

இதனால் இவர்களுக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததில் வியப்பில்லை. ஆதரவு இருந்தாலே, அதில் ஈடுபடுபவர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

எனவே, அடுத்தக் கட்டத்துக்குச் செல்லலாம் என்று திறன் வாய்ந்த ஆசிரியர்களுடன் பள்ளி மாணவர்களுக்கு கணிதம், தாவரவியல், கணினி அறிவியல், வேதியல், இயற்பியல் பாடங்கள் எனப் பலவற்றுக்கு வகுப்பு எடுக்கிறார்கள்.




இதற்கும் மக்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. இதனால் NEET, JEE, IIT, TNPSC போன்ற தேர்வுகளுக்கும் வகுப்புகள் சேர்த்துள்ளனர்.

தமிழ், ஆங்கிலத்தில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

அதிகரிக்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை

இது வரை (நவம்பர் 2018) ஒரு கோடியே 48 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு சேனலுக்கு இது மிகப்பெரிய சாதனை.

1.06 லட்சம் பேர் இச்சேனலை பின்தொடர்கிறார்கள்.

காணொளிகள் கருத்துப் பகுதியில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலும் அளிக்கிறார்கள்.

மகிழ்ச்சி

வடிவேல் ஒரு படத்துல சொல்வாரு, "யோவ்.. நான் முன்னேறுகிறேனோ இல்லையோ.. நீ சொல்றதை கேட்குறதுக்கு நல்லா இருக்குயா" ன்னு.

அது மாதிரி தட்டு தடுமாறி வந்தாலும், தமிழக அரசு பக்கம் இருந்து இப்படி ஒரு முயற்சி நடக்கிறது என்பதே மகிழ்ச்சியைத் தருகிறது.

தற்போது ஜியோ வந்த பிறகு இணையத்தில் காணொளி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதை இது போலப் பயனுள்ள விசயத்துக்கு மாணவர்கள் பயன்படுத்தினால் அவர்களின் முன்னேற்றத்துக்கு நல்லது.

இது போல அற்புதமான சேவை இருப்பது தெரிந்தும் அனைவருக்கும் கூறாமல் இருப்பதே, நாம் மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்.

எனவே, தமிழகக் கல்வித்துறையின் இந்த YouTube தளம் பற்றிய தகவலை அனைவரிடையே கொண்டு செல்லுங்கள். மாணவர்களின் வளர்ச்சியில் சிறு பங்காக இருங்கள்.

நாளைக்கே யாராவது உங்களிடம் வந்து, "நீங்க கூறியபடி அதில் படித்து நன்கு மதிப்பெண்கள் பெற்றேன்" என்றால், உங்களுக்கு மகிழ்ச்சி தானே!

தமிழகக் கல்வித்துறை YouTube தளத்தின் முகவரி -Click Here..

Post Top Ad