TRB மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது விரைவில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Saturday, November 10, 2018

TRB மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி வரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது விரைவில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்




ஈரோட்டில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு  பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 


சிறப்பு ஆசிரியர் தேர்வில் எவ்வித  முறைகேடும் நடைபெறவில்லை. சான்றிதழ்களில் சில குளறுபடி உள்ளது தெரிய  வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சான்றிதழ்  குளறுபடி குற்றச்சாட்டுகளில்  உள்ளானவர்கள் சார்பதிவாளர்கள் அல்லது  கோட்டாட்சியர்களிடம் சான்றொப்பம் பெற்று ஒப்படைக்க வேண்டும்.


  சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்துள்ளது என யாராவது குற்றச்சாட்டு  சுமத்தினால் அதுதொடர்பாக உரிய  விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் வேண்டுமென்றே பொய்யான  குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்படும்.  

Post Top Ad