என்றும் நலவாழ்வுக்கு… - Asiriyar.Net

Monday, November 26, 2018

என்றும் நலவாழ்வுக்கு…




சாதாரண வாழ்க்கை முறையில் நாம் செய்துகொள்ளும் எளிய மாற்றங்களும் நம்மை நோயின்றி நீண்ட காலம் வாழவைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நல வாழ்வு குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று, உப்பைக் குறைத்தால் பல வியாதிகள் குறையும் என்கிறது. உடல் நலமுள்ள ஒருவர் தினமும் 6 கிராமிற்கு குறையாமல் உப்பு சேர்க்கிறாராம். இந்த அளவை 3 கிராமாக குறைத்துக் கொண்டால் இரத்த அழுத்த வியாதி வராது. பக்க வாத நோயை 13 சதவீத அளவில் கட்டுப்படுத்தும். இதய வியாதியை 10 சதவீதம் குறைக்குமாம்.

ஒரு கோப்பை காபிஅல்லது டீக்கு 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்க்கிறோம். இதை ஒரு கரண்டியாக குறைத்துக் கொண்டால் தினமும் 30 கிராம் சர்க்கரை மிச்சம் பெறும். ஆண்டுக்கு 32 ஆயிரம் கலோரிகள் உடல் எடையில் குறையும். இதனால் உடல் பருமன் மற்றும் பல வியாதிகளை தடுக்கலாம்.

கொழுப்புடன் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட குறைந்தவிலை பிஸ்கட், கேக், மாவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும். இதனால் இதய வியாதிகள் வராமல் தடுக்கலாம்.

அசைவம் சாப்பிடும் முன்பு சிறிது காய்கறி சாப்பிட்டால் அதிகப்படியான கலோரிகள் கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்து காய்கறிகள் சேர்த்து வந்தால் மார்பகப் புற்றுநோய் 21 சதவீத அளவு மட்டுப்படும்.

நலமான வாழ்வுக்கு சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்து கொள்ளலாமே!

Post Top Ad