முடிவுக்கு வந்தது வாழ்நாள் இலவச சேவை மொபைல் போன் நிறுவனங்கள் அதிரடி - Asiriyar.Net

Sunday, November 25, 2018

முடிவுக்கு வந்தது வாழ்நாள் இலவச சேவை மொபைல் போன் நிறுவனங்கள் அதிரடி





இனி, 28 நாட்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யவில்லையெனிலபல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மொபைல் எண் செயல்படாத நிலைக்கு செல்லும் என்று அறிவிப்பு

மொபைல் போன் அறிமுக காலத்தில், ‘இன்கமிங், அவுட்கோயிங்’ என்ற அழைப்புகளுக்கு, தனியார் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்தன.

பின், பொது துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் சேவையில் நுழையும் போது, இன்கமிங் இலவசம் என அறிமுகப்படுத்தியது.
இதன் பின், அனைத்து தனியார் மொபைல் போன் நிறுவனங்களும், இன்கமிங்கை இலவசமாக்கின.

அப்போது, அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு, வாழ்நாள் அழைப்பு இலவசம் என்ற வாசகத்துடனும், இலவச சிம் கார்டுகளை வழங்கின.

ஜியோ நிறுவனம் வந்த பின் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏராளமானோர், வாழ்நாள் அழைப்பு இலவசம்என்பதால், வரும் அழைப்புக்கு மட்டுமே சேவையை பயன்படுத்துகின்றனர்.

இதனால் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில முதலில் அவுட்கோயிங் துண்டிக்கப்படும்

15 நாட்களில் இன்கமிங் துண்டிக்கப்படும்.
பின், நம்பர் செயல் இழந்துவிடும்.

இது குறித்து, தொடர்ச்சியாக குறுந்தகவல்கள் மொபைல் எண்ணுக்கு வரும்.
மொபைல் எண்ணில், 1000 ரூபாய் இருப்பு இருந்தாலும், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவில்லையெனில் மொபைல் எண் செயல் இழந்து விடும்.

குறைந்தது,ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அதிரடி

Post Top Ad