பள்ளிக்கல்வித்துறை அலுவல் சாரா உறுப்பினராக தென்னரசு எம்எல்ஏ., நியமனம் - Asiriyar.Net

Thursday, November 1, 2018

பள்ளிக்கல்வித்துறை அலுவல் சாரா உறுப்பினராக தென்னரசு எம்எல்ஏ., நியமனம்





 தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் செயல்படும் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணைய மன்றத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு (ஈரோடு கிழக்கு), நடராஜ் (மயிலாப்பூர்), வெங்கடாசலம் (சேலம் மேற்கு), பரமசிவம் (வேடசந்தூர்), செல்ல மோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் கல்வியாளர்களாக கோவை பண்ணாரியம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் பாலசுப்பிரமணியம், சத்தியபாமா நிகர் நிலை பல்கலைக்கழக பேராசிரியர் மரியஜினா ஜான்சன், ஏவிஎம்., குழும பள்ளிக்கூட தாளாளர் நித்யாகுகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினராக நியமிக்கப்பட்ட தென்னரசு எம்எல்ஏ.,வுக்கு ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Post Top Ad