முதன்மை கல்வி அலுவலரின் தீபாவளி வாழ்த்து! - Asiriyar.Net

Sunday, November 4, 2018

முதன்மை கல்வி அலுவலரின் தீபாவளி வாழ்த்து!


*தீபஒளி வாழ்த்துக்கள்* 

 *லஞ்சம் இல்லா சமூகம்

        பஞ்சம் இல்லா உலகம்

நெஞ்சில் நேர்மை
      குணத்தில் அழகு

இறையாசியோடு
      இல்லத்தில் இணக்கம்


நடத்தியல் நற்பண்பு
நாட்டின் ஒழுங்கு
உலகின் அமைதி
   இவையெல்லாம் சிறக்க

அறியாமையை அகற்றி
அகல்விழக்கு ஏற்றி
அறம் போற்றி 
புறம் பேசாது

தமிழ் புகழ் போற்றி
இனிய தீபாவளி நாளில்
அறிவு தீபம் ஏற்றி
அகற்றிடுவோம்
தீய சிந்தனையை

வெற்றிக் கோட்டையை 
எட்டும் தருணம்
திரும்பி பார்க்க நேரமில்லை 
வருகிறது
 *பத்து, பதினொன்ற* ு மற்றும்
 *பனிரெண்டாம்* *வகுப்பு* 
 *பொதுதேர்வு* 

நீங்கள் ஏற்றும் தீபம்
இலக்கை  நோக்கிய 
தீபமாகட்டும்

வெற்றித்தீபம் ஏற்ற 
விரைந்திடுவோம்


பகிர்ந்திடுவோம் 
இனிப்பு பலகாரம்

பரவசமாய் உண்போம்
சமரசமாய் வாழ்வோம்

சமதர்மக் கொள்கையுடன்
அனைவருக்கும்  பாதுகாப்பான 
 *நல் தீபாவளி வாழ்த்துக்கள்*

                  By 
 *முதன்மைக் கல்வி அலுவலா்* 
 *தேனி மாவட்டம்.*

Post Top Ad