இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .! - Asiriyar.Net

Tuesday, November 27, 2018

இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் .!





இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக
சுனில் அரோராவை நியமித்து
குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓ.பி.ராவத் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பதவியேற்றார்.தேர்தல் ஆணையத்தின் 21வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த ஜூலை மாதம் பதவி ஏற்றார்.
இந்நிலையில் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக் காலம் டிசம்பர் 2 ஆம் தேதி நிறைவடைகிறது.இதனால் இந்தியாவின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad