பள்ளிக்கல்வி துறையில் 3 பேருக்கு பதவி உயர்வு - Asiriyar.Net

Tuesday, November 27, 2018

பள்ளிக்கல்வி துறையில் 3 பேருக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அரசாணை: தஞ்சாவூர்  முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, மதுரை முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

உசிலம்பட்டி  மாவட்ட கல்வி அலுவலர் டி.முருகேசன், தற்காலிக பதவி உயர்வில் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்படுகிறார். சேரன்மாதேவி கல்வி அலுவலர் ஜெயராஜ் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநராகவும், சத்தியமங்கலம் கல்வி அலுவலர் சாந்தா, தஞ்சாவூர்  முதன்மைக் கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். 

Post Top Ad