பாடத்திட்டத்தை குறைக்க அரசு சார்பில் வல்லுநர் குழு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, May 27, 2020

பாடத்திட்டத்தை குறைக்க அரசு சார்பில் வல்லுநர் குழு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.மேலும் அவர், பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள நிலையில், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்புக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Recommend For You

Post Top Ad