10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, May 16, 2020

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்




10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்:*

_*ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 11 ஆம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும் என்றும், தேர்வு எழுத முடியாமல் போன 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். வெளி மாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. https://tnepass.tnega.org/#/user/pass என்ற லிங்கை கிளிக் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.*_

Post Top Ad