வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு Remote Assistance சேவை.. அதுவும் இலவசமாக..!' -HP நிறுவனம் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, April 25, 2020

வீட்டில் பயன்படுத்தும் கணினிகளுக்கு Remote Assistance சேவை.. அதுவும் இலவசமாக..!' -HP நிறுவனம்


கொரோனா தொற்று காரணமாகப் பெரும்பான்மையான மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். வீட்டிலிருந்து வேலை பார்க்க முடிந்த பல துறைகளைச் சேர்ந்தவர்களும் கணினியின் மூலம் வேலைபார்த்து வருகிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல துறைகளிலும் பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். கணினி அல்லது லேப்டாப்பில் பிரச்னை ஏற்பட்டாலும் வெளியில் சென்று சரி செய்ய முடியாத நிலைதான் இருக்கிறது. சில நிறுவனங்களில் தங்கள் பணியாளர்களுக்கு லேப்டாப்பில் பிரச்னை ஏற்பட்டால் அவர்களே அதைச் சரி செய்து கொடுக்கின்றனர். ஆனால் பலருக்கும் நிறுவனத்திலிருந்து அவ்வாறு வழங்கப்படுவதில்லை.
HP

இவ்வாறு தனிப்பட்ட முறையில் கணினியில் சாப்ட்வேர் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு Remote Assistance வழங்கப்படும் என HP நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு இந்தச் சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள அந்நிறுவனம், எந்த நிறுவனத்தின் மடிக்கணினியாக இருந்தாலும் Remote Assistance வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பயனர்கள் மட்டுமல்லாது சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கணினிகளில் பிரச்னை என்றாலும் இந்தச் சேவையைக் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது HP நிறுவனம்.


சூரியக் குடும்பத்தைக் கடந்துசென்ற முதல் இன்டர்ஸ்டெல்லார் வால் நட்சத்திரத்தின் புதிய ஆய்வு முடிவுகள்!
லேப்டாப்

செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், இயங்குதளம், சாப்ட்வேர் கோளாறு மற்றும் நெட்வொர்க் பிரச்னைகள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் பிரச்னை அல்லது அது தொடர்பான உதவி தேவைப்பட்டால் HP நிறுவன உதவி மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கென தனிக்குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த சேவை மே மாதம் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
வீட்டில் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் கணினிகள் அல்லது மடிக்கணினிகளுக்கு 1800 258 7140 என்ற எண்ணை அழைக்கலாம்.வியாபார நிறுவனத்தைச் சேர்ந்த கணினிகளுக்கு hpindiaservices@hp.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம்.Recommend For You

Post Top Ad