வரலாறு காணாத விலை உயர்வு.. ரூ.36 ஆயிரத்தை எட்டியது தங்க விலை! - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, April 14, 2020

வரலாறு காணாத விலை உயர்வு.. ரூ.36 ஆயிரத்தை எட்டியது தங்க விலை!


கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையிலும் தங்க விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இறக்குமதி குறைவினால் தங்க விலை அதிகரித்து வந்தது. அப்போது கூட 33 ஆயிரம் வரையிலுமே தங்க விலை உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது ஊரடங்கினால் அனைத்தும் முடங்கிக் கிடக்கும் சூழலில் தங்க விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ரூ.35,520 ஆக இருந்த தங்க விலை இன்று ரூ.36, 104 ரூபாயாக அதிகரித்துள்ளது.


இப்படி தொடர்ந்து கொண்டே சென்றால் இந்த வருட முடிவுக்குள் ஒரு சவரன் தங்க விலை ரூ.50 முதல் 60 ஆயிரம் வரை விற்பனையாகும் என்று கூறப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Recommend For You

Post Top Ad