TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு... 10 நாட்கள் விடைத்தாளை பதுக்கி வைத்த தாசில்தார்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 13, 2019

TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு... 10 நாட்கள் விடைத்தாளை பதுக்கி வைத்த தாசில்தார்!




ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வின் OMR சீட்டை தனது அறையில் உள்ள பீரோவில் பதுக்கி வைத்து கொண்டு தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டதையடுத்து 10 நாள்கள் பின்பு ஒப்படைக்க கொண்டு சென்றனர்.


தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி ஞாயிற்றுக்கிழழை 12 லட்சத்திற்கு அதிகமாக படித்த இளைஞர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்த நிலையில் கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட 9 மையங்களில் ஆண்கள், பெண்கள், மாற்று திறனாளிகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட தேர்வுகள் எழுதி முடிந்தனர். தேர்வுகள் எழுத வரும் தேர்வாளர்கள் OMR சீட்டில் ஏதேனும் கிழிந்து சேதமடைந்திருந்தாலோ அவற்றை மாற்றி புதிதாக சீட் வழங்குவதற்காக ஓவ்வொரு தாலுகாவிற்கும் 100 சீட்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.


அந்த கூடுதலாக வழங்கப்பட்ட OMR சீட்டுகளை தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நேரங்கள் முடிந்தவுடனே விடைத்தாளுடன் சேர்த்து தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது அரசு விதிமுறை. ஆனால் விதிமுறைகளை மீறி கமுதி தாசில்தார் மீனலோசினம் கூடுதலாக வழங்கப்பட்ட OMR சீட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள பீரோவில் பதுக்கி வைத்து தேர்வாணய அலுவலகத்திற்கு டூமிக்கி கொடுத்து வந்துள்ளார்.


இதையடுத்து தேர்வாணைய சென்னை அலுவலக அதிகாரிகளின் கடுமையான உத்தரவின் பெயரில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படியும் கமுதி வட்டாச்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பணியாளரிடம் கொடுத்து சென்ளை தேர்வாணயம் அலுவலகத்தில் ஒப்படைக்க அரசு பேருந்தில் கொண்டு சென்றிருக்கின்றனர். OMR சீட்டை அரசு விதிமுறைகள் மீறி ஒப்படைக்காமல் முறைகேடுகளில் ஈடுப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வு எழுதியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்வு எழுதிய மாணவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

Post Top Ad