M என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் இப்படி பட்டவர்களா? உடனே இதை படியுங்க!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 20, 2019

M என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் இப்படி பட்டவர்களா? உடனே இதை படியுங்க!!





உலகில் ஒருவர் பிறந்தவுடன், அவரது குணங்களை குறித்து அவரது பிறந்த நேரம், பெயர், பெயரின் முதல் எழுத்து ஆகியவற்றை கொண்டு கணிக்க முடியும். இந்நிலையில் M என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது குணங்கள் எப்படி இருக்கும் எனஎன்பதை தற்போது பார்க்கலாம்.

M எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் விஸ்வாசம் கொண்டவர்களாகவும் , கடின உழைப்பாளியாகவும், தங்களை நம்பி இருப்போருக்கு பாதுகாப்பு உணர்வைத் கொடுப்பவர்களாகவும் இருப்பர்.

மேலும் அவர்கள் எப்பொழுதும் கவனமாக இருக்கக்கூடியவர்கள். தங்களது வாழ்வின் அடுத்த கட்டத்தைப் பற்றிய யோசனை அவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். மேலும் தங்களது வாழ்வில் புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க ஒருபோதும் தயக்கம் கொள்ளமாட்டார்கள்.

M என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்டவர்கள் அதிக தன்னம்பிக்கைக் கொண்டவர்கள், அதன் மூலம் அவர்கள் வாழ்வில் நிறைய வெற்றிகளை காண்பார்கள். இவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் மனதில் திட்டம் போட்டு செய்வார்கள்.


மிகவும் ஒழுக்கமானவராகவும், நேர்மையானவராகவும் இருக்கும் இவர்கள்
ஆளுமைப் பண்புகள் கொண்டவர்களாக இருப்பர். மேலும் தன்னிடம்
தான் வகுத்த எல்லையை ஒருவர் மீறும் போது, இவர்களது பொறுமையை சோதித்துப் பார்க்க நினைத்தால் ஆக்கிரோஷமாக கொந்தளிக்கும் குணம் கொண்டவர்கள்.

மேலும் M என்ற எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு விரைவில் முடிவு எடுக்கமாட்டார்கள். நன்கு அலசி ஆராய்ந்து, முழு விவரத்தையும் தெரிந்த பின்பே எந்த ஒரு முடிவையும் எடுப்பார்கள்.

 காதலில் எளிதில் விழமாட்டார்கள் இந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் தங்களது உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். முக்கியமாக மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் பழகமாட்டார்கள். இதனாலேயே இவர்களை காதலில் விழ வைப்பது என்பது சற்று கடினமான ஒன்றாக இருக்கும்.

மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட இவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களும் கூட.
பிடித்தவர்களுக்காக எதையும் செய்பவர்கள். தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிக்க எதையும் செய்வதோடு, முழுவதும் ஆதரவாக இருப்பார்கள்.


Post Top Ad